பெண் சுதந்திரம்:
தற்போது சமுதாயத்தில் பெண் சுதந்திரம் பற்றி ஏதேதோ படங்கள், குறும்படங்கள் (மை சாய்ஸ்) மற்றும் கட்டுரைகள் இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது. ஆனால் அவர்கள் இந்த சமுதாயத்தின் முன் எடுத்துவைக்கும் சில விசயங்கள் மனதை தீயாய் சுட்டெரிக்கின்றது.
திருமணத்திற்கு முன்னால் உடலுறவு வைத்துகொள்வது, தாலி கயிற்றை கழற்றி எறிவது, கணவர் பெயரை பெயருக்கு பின்னால் வைத்துகொள்வது என விரிகின்றது.
உண்மையில் பெண் சுதந்திரம் என்பது என்ன?
பண்டைய காலங்களில் பெண்கள் அடுப்பங்கரையை தவிர வேறு உலகம் கண்டதில்லை, பெண்கல்வி, கணவர் இறந்தால் உடன்கட்டை ஏறுதல் மற்றும் பெண்ணடிமை போன்றவற்றிலிருந்து பெண்கள் விடுதலை அடைய வேண்டும் என்றும், பெண்கள் நம்முடைய சமுதாயத்தில் சிறப்பான பங்களிப்பை அளிக்கவேண்டும், பெண்கள் வெறும் பிள்ளை பெறுவதற்காக படைக்கப்பட்டவர்கள் என்றும். இந்த சமுதாயதிற்கு குரல்கொடுக்க வேண்டும். இது தான் பெண் சுதந்திரம்.
பண்டைய கால வரலாற்றிலிருந்து மாறுபட்டு தற்போது பெண்கள் மிக சிறப்பான பங்களிப்பை இந்த உலகிற்கு அளித்துகொண்டிருக்கிறார்கள், இது இன்றோ அல்லது நேற்றோ மாறியது அல்ல பாரதி காலத்திற்கு முன்பே ஆரம்பித்த ஒன்று.
திருமணதிற்கு முன்பே உடலுறவு வைத்துகொள்வது ஏன், எதற்காக.? மனம்போன போக்கில், கட்டுப்பாடு இல்லாமல் வாழ்வது வாழ்க்கை இல்லை. தன்னொழுக்கம், கண்ணியம் என்பது உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் பொதுவானதே.
நினைத்தவாறு உடை அணிவது என்பது சரியே, ஆனால் உடைகளில் உள்ளாடை, மேலாடை என்று பாகுபாடு உள்ளது, திரைப்படங்களில் காண்பிக்கும் உடைகளை அப்படியே நிஜ உலகினில் அணிய முடியாது. பல பெண்கள் வாரத்தில் ஒரு நாள் புடவையை அணிகிறார்கள், அது ஏன் என்று உங்களையே கேள்வி கேட்டு பாருங்கள். மற்ற உடைகளை காட்டிலும் புடவையில் ஒரு புள்ளி அதிக அழகுடன் தெரிவீர்கள் என்பதால் மட்டுமே. ஆனால் மற்ற உடைகள் அணிவது நம் வசதிக்காக மட்டுமே அதை ஆபாசம் இல்லாமல் நேர்த்தியாக அணியுங்கள்.
தாலி கையிற்றை கழற்றி எறிவது என்பது எவ்வளவு கேவலமான செயல் தெரியுமா? இன்றளவும் மேலை நாடுகளில் கூட திருமண வளையத்தை பாதுகாத்து கொண்டுதான் இருக்கின்றார்கள். தாலி என்பது திருமணத்தின் அடையாளம், சமூகத்தில் அதற்கான தனி மரியாதை இன்றளவும் உண்டு. அதுதான் நம் பாரம்பரியமும் கூட. கணவரின் பெயரை இணைத்துகொள்வது என்பது ஒருவித பாதுகாப்பை வலியுறுத்தியே பின்பற்றபடுகிறது.
இன்றளவும் இன்னும் பெண் சுதந்திரம் நம் சமூகத்தில் தேவைபட்டுகொண்டுதான் இருக்கிறது. அதற்க்கு தங்களால் முடிந்த உதவிகளை மட்டும் செய்யுங்கள். வெறும் 99 பெண்கள் சேர்ந்து குறும்படம் எடுத்தால் தவறு சரியாக மாறிவிடாது.
...தமிழ்...
No comments:
Post a Comment